Showing posts with label குட்டிக்கதை. Show all posts
Showing posts with label குட்டிக்கதை. Show all posts

Friday, April 24, 2009

உனக்கென்ன மேலே நின்றாய் !

புதிதாக மேலுலகம் வந்துசேர்ந்த மூன்று ஆன்மாக்களின் முன் கடவுள் தோன்றினார். பின் அவைகளைப் பார்த்து, 'சொர்க்கத்தில் ஒருவருக்குத்தான் இடமுண்டு. மற்றவர்கள் நரகத்திற்குச் செல்லவேண்டும். உங்களில் யார் ஒருவர் சொர்க்கம் செல்வதென்று நீங்களே முடிவு செய்யுங்கள்' என்றார்.

முதல் ஆன்மா, 'நான் ஒரு சாமியார். நிதமும் கடவுளையே நினைத்துப்போற்றி வழிபட்டு வாழ்ந்து வந்தேன். எனவே, எனக்குத்தான் சொர்க்கத்திற்குச் செல்லும் முழுத்தகுதியும் உண்டு' என்றது.

இரண்டாம் ஆன்மாவோ, 'நான் ஒரு மருத்துவர். உடல்நலம் குன்றி அவதிப்படுவோரின் துயர்துடைப்பதையே வாழ்நாளின் குறிக்கோளாகக்கொண்டு, நிறைய உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறேன். எனவே, என்னை சொர்க்கத்திற்கு அனுப்புங்கள்' என்று வாதிட்டது.

கடவுள் மூன்றாம் ஆன்மாவை ஏறிட, அது 'நான் ஒர் ஈழத்தமிழன்' எனக்கூறி அமைதியானது. உடனே, மற்ற இரு ஆன்மாக்களும், 'கடவுளே! சொர்க்கத்தில் இருக்கும் அந்த இடம் எங்களுக்கு வேண்டாம். இந்த ஆன்மாவிற்கே கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அது பூமியிலேயே நரகவாழ்க்கையை வாழ்ந்துவிட்டது' என்றன.

கடவுளும் தெரிந்துகொண்டார் :^(

(கேட்ட கதைதான். இன்று மனதில் இப்படித் தோன்றியது)


Pages

Flickr