ஒரு விதமான மனநிலை பாதிப்புக்கு
உள்ளான நாயகன் மனைவியின் தொடர்ந்த அனுசரணையான துணையால் புகழின் சிகரததைத் தொடுகிற கதை. கணிதவியலாளர் ஜான் நாஷின் வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஹாலிவுட் படம்
A Beautiful Mind. அடிப்படையில் அதே கதை (மட்டுமே).
அதில் “தனது” இன்றையதமிழ்கலாச்சாரம்பற்றிய அவதானத்தைகலந்து செல்வராகவன் கொடுத்திருக்கும் படம்தான் மயக்கம் என்ன. ஏற்கனவே ABM பார்த்திருந்ததால் இப்படம் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
காட்சிக்குகாட்சிமதுகோப்பைகளும்பாட்டில்களும்திரையைநிரப்பிக்கொண்டே இருப்பதால் இரண்டுமணிநேரம்ஏதோ ஓர்ஒயின்ஷாப் 'பாரு'க்குள்உட்கார்ந்திருந்துவிட்டுவந்தஉணர்வுஇறுதியில்.
‘சார், குடிக்க மினரல் வாட்டரா, இல்ல ஓட்டல் தண்ணியா?’ இன்றைய தினங்களில், இந்தியாவில் சாதாரணமாக எந்த உணவகத்தில் சென்று அமர்ந்தாலும் பணியாளரிடம் நாம் எதிர்கொள்ளும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். இந்த ஒரு கேள்வி நமக்குள், அவர்களை நோக்கி, எழுப்பும் கேள்விகள் நிறைய. முதலில், உங்கள் உணவகத் தண்ணீர், மினரல் வாட்டருக்கு இணையான தரமும், சுகாதாரமும் அற்றது என ஒப்புக்கொள்கிறீர்களா?
சுகாதாரமற்றது என்றால்: சுகாதாரமற்ற தண்ணீரை உங்களை நம்பி வரும் வாடிக்கையாளருக்குக் கொடுப்பதற்கு உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? எங்கள் உணவகத் தண்ணீர் சுகாதாரமற்றது என வெளிப்படையாகத் தெரிவிக்கும் தைரியம், நேர்மையாவது இருக்கிறதா? உங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கொடுப்பது உங்கள் கடமையென்று நீங்கள் நினைக்கவில்லையா? சுத்தமான தண்ணீரைக்கூட உங்களால் வாடிக்கையாளர்களுத்துத் தரமுடிவில்லை என்றால் எப்படிச் சுகாதாரமான உணவை அவர்களுக்குத் தருவீர்கள் என எதிர்பார்ப்பது? இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெயர்ப்பலகையில் உயர்தர உணவகம் என்று போட்டுக்கொள்வது சரியா?
உணவகத் தண்ணீர் சுகாதாரமானது தான் என்றால்: வரும் வாடிக்கையாளர்களிடம் மினரல் வாட்டர் விற்கவேண்டிய அவசியம் என்ன? வாடிக்கையாளர் மினரல் வாட்டர் வாங்கும்போது, உங்கள் உணவகத் தண்ணீர் சுகாதாரமற்றது என்ற அவர் எண்ணத்தை மறைமுகமாக(உண்மையில், வெளிப்படையாக)த் தெரிவிக்கிறாரே, உங்களுக்கு வெட்கமாக இருக்காதா? அப்பட்டமாக மினரல் வாட்டர் விற்பனையை 'ஊடுதொழிலா'கச் செய்யும் நோக்கம்தானே இது? உணவகத் தண்ணீர் சுத்தமாக இருக்காது என்ற மக்களின் பொதுவான எண்ணத்தை மாற்றவேண்டிய கடமையை விடுத்து, அவ்வெண்ணத்தையே விற்பனைக்கு பயன்படுத்துவது கேவலமாகத் தோன்றவில்லையா?வாடிக்கையாளர் மினரல் வாட்டர் வாங்கும் பட்சத்தில், மினரல் வாட்டர் விற்பனையிலும் லாபம், உணவகத் தண்ணீர் மீதப்படுவதால் அதுவும் லாபம் என இரட்டை லாபம் பார்க்கிறீர்கள் தானே?
உண்மையில், இது லாபமா? கொள்ளையா?
விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வைல்டு கார்டு சுற்றின் முடிவில் பிரசன்னா மக்களின் வாக்குகள் மூலம் இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற்றிருக்கிறார். மக்களிடம்அவருக்கு நல்ல செல்லவாக்கு இருக்கிறது என பரவலாகக் கணிக்கப்பட்ட நிலையில், இம்முடிவு அதை உறுதிப்படுத்தியது. இதுபோன்ற போட்டிகளில் மக்கள் தேர்ந்த இசையறிவுடன்தான் வாக்களித்து தேர்வு செய்கிறார்களா போன்ற கேள்விகளும் கூடவே எழுப்பப்படுகின்றன. நிச்சயம் இசைத்துறையில் சீரிய தேர்ச்சி இருக்காதுதான். ஆனால், குறைந்த பட்சம் திரையிசை ஆர்வம் உடையவர்கள் தான் இப்போட்டிகளைத் தொடர்ந்து பார்த்துவருகிறார்கள். நடுவர்களின் கருத்துகளையும் கவனிக்கிறார்கள். அதையும் தாண்டி மக்களிடம் செல்வாக்குப் பெறுவதற்கான வேறு காரணிகள் என்னவாக இருக்கும்? மக்களுக்கு நெருக்கமான ஜனரஞ்சகப் பாடல்களைப் பாடுவதன் மூலம் அதைச் செய்துவிட முடியுமா?. எப்படியிருந்தாலும், இறுதியில் இந்த நிகழ்ச்சியும், திரையிசையும் மக்களுக்காகத்தான் எனும்போது அவர்களின் முடிவும் மதிப்புக்குரியதே.
மாற்றுக்கருத்துக்கள், மக்களின் திரையிசை ரசனையை உயர்த்தும் செயல்களையே பணிக்கின்றன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறுதிப்போட்டியில் சூப்பர் சிங்கர் வெற்றியாளரை முடிவு செய்யவும் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படுமா எனத்தெரியவில்லை. ஒருவேளை நடத்தப்பட்டால், அப்படிவரும் முடிவுகளிலும் மக்களின் இசையறிவு பற்றிய கேள்விகள் கூர்மையடையும். மக்களும், நிகழ்ச்சியின் நடுவர்களும் சேர்ந்து வெற்றியாளரை முடிவு செய்வதாக ஏற்கனவே சில நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், மக்கள் வாக்குகளின் பங்கு என்ன? நடுவர்களின் பங்கு என்ன? எப்படி முடிவு செய்கிறார்கள்? போன்ற தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் மக்கள் வெறுமனே ஏமாற்றப்படுகிறார்களோ என்ற உணர்வும் இருக்கிறது. மக்களின் பங்களிப்பு நிச்சயம் நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவதோடு அவர்களின் ரசனை உணர்வை வெளிப்படுத்துவதாய் இருக்கும். அதேநேரம், நடுவர்களின் துறைசார்ந்த அனுபவத்துடனான வெற்றியாளர் தேர்வு திரையிசை வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை.
பேசாமல், 'விஜய் சினிமா விருகள்' வழங்கப்படுவதுபோல் நடுவர்கள் தேர்வாக ஒருவரையும் மக்களின் தேர்வாக ஒருவரையும் அறிவித்து விடலாம்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வைல்டுகார்டு சுற்றில் ஒரு போட்டியாளர் பாடிய 'சாவரே' என்ற ஹிந்திப் பாடல் கேட்ட முதல் முறையிலேயே மனதை வெகுவாகக் கொள்ளைகொண்டது. அப்பாடலின் பின்புலம் அறியக் கூகுளில் தேட, பண்டிட் குயின் ஹிந்தி படத்தின் பாடல் எனத் தெரிய வந்தேன். பெரும்பாலும் தமிழ்ப்பாடல்கள் மட்டுமே கேட்கும் என் போன்ற ரசிகர்களுக்கு, அப்பாடலின் அர்த்தம் புரியாவிட்டாலும் அந்த டியூனும் மிகநுணுக்கமாக அப்படாலைப் பாடிய அழகும் இனம்புரியாத ஒரு மனமயக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை கேட்டிராவிட்டால், ஒருமுறை காதுகொடுங்கள்!
யூடிப்பில் கிடைத்த இக்காணொளியில் முசாரட் அப்பாஸ் என்பவரின் குரலில் அந்தப்பாடல்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு வருத்தம்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவர் ஏனோ கடந்த சிலவாரங்களாக இறுதியில் விடைபெறும்போது தன்பெயருடன் சாதிப்பெயரையும் இணைத்துக் கூறிவருகிறார். ஏனிந்த திடீர் மாற்றம்? இதன் நோக்கம்/தேவைதான் என்ன?
சொந்தப்பெயருடன் சாதிப்பெயரையும் சேர்த்துச் சொல்லும் மனோநிலை தமிழகத்தில் இந்தத் தலைமுறையில் இல்லையென நம்பியிருக்கும் நிலையில், இதுபோன்ற பின்னோக்கிய நகர்வுகள் பெரும் மனவருத்தத்தையும் அயர்ச்சியையும் கொடுக்கின்றன!
மொத்தத்தில், சூப்பர்சிங்கர்நிகழ்ச்சிசாதாரணரசிகனைமேம்பட்டரசனையுடன்திரைப்பாடல்களைகூர்ந்துஅவதானிக்கச்செய்கிறது. விளைவாக, பாடல்-பதியும்தொழில்நுட்பம்ஏற்படுத்தும்செயற்கைத்தன்மையால், நல்லபாடல்கள்தரும்அருகாமையைசிலநேரங்களில்இழக்கவும்நேர்கிறது.