மாற்றுக்கருத்துக்கள், மக்களின் திரையிசை ரசனையை உயர்த்தும் செயல்களையே பணிக்கின்றன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறுதிப்போட்டியில் சூப்பர் சிங்கர் வெற்றியாளரை முடிவு செய்யவும் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படுமா எனத்தெரியவில்லை. ஒருவேளை நடத்தப்பட்டால், அப்படிவரும் முடிவுகளிலும் மக்களின் இசையறிவு பற்றிய கேள்விகள் கூர்மையடையும். மக்களும், நிகழ்ச்சியின் நடுவர்களும் சேர்ந்து வெற்றியாளரை முடிவு செய்வதாக ஏற்கனவே சில நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், மக்கள் வாக்குகளின் பங்கு என்ன? நடுவர்களின் பங்கு என்ன? எப்படி முடிவு செய்கிறார்கள்? போன்ற தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் மக்கள் வெறுமனே ஏமாற்றப்படுகிறார்களோ என்ற உணர்வும் இருக்கிறது. மக்களின் பங்களிப்பு நிச்சயம் நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவதோடு அவர்களின் ரசனை உணர்வை வெளிப்படுத்துவதாய் இருக்கும். அதேநேரம், நடுவர்களின் துறைசார்ந்த அனுபவத்துடனான வெற்றியாளர் தேர்வு திரையிசை வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை.
பேசாமல், 'விஜய் சினிமா விருகள்' வழங்கப்படுவதுபோல் நடுவர்கள் தேர்வாக ஒருவரையும் மக்களின் தேர்வாக ஒருவரையும் அறிவித்து விடலாம்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வைல்டுகார்டு சுற்றில் ஒரு போட்டியாளர் பாடிய 'சாவரே' என்ற ஹிந்திப் பாடல் கேட்ட முதல் முறையிலேயே மனதை வெகுவாகக் கொள்ளைகொண்டது. அப்பாடலின் பின்புலம் அறியக் கூகுளில் தேட, பண்டிட் குயின் ஹிந்தி படத்தின் பாடல் எனத் தெரிய வந்தேன். பெரும்பாலும் தமிழ்ப்பாடல்கள் மட்டுமே கேட்கும் என் போன்ற ரசிகர்களுக்கு, அப்பாடலின் அர்த்தம் புரியாவிட்டாலும் அந்த டியூனும் மிகநுணுக்கமாக அப்படாலைப் பாடிய அழகும் இனம்புரியாத ஒரு மனமயக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை கேட்டிராவிட்டால், ஒருமுறை காதுகொடுங்கள்!
யூடிப்பில் கிடைத்த இக்காணொளியில் முசாரட் அப்பாஸ் என்பவரின் குரலில் அந்தப்பாடல்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு வருத்தம்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவர் ஏனோ கடந்த சிலவாரங்களாக இறுதியில் விடைபெறும்போது தன்பெயருடன் சாதிப்பெயரையும் இணைத்துக் கூறிவருகிறார். ஏனிந்த திடீர் மாற்றம்? இதன் நோக்கம்/தேவைதான் என்ன?
சொந்தப்பெயருடன் சாதிப்பெயரையும் சேர்த்துச் சொல்லும் மனோநிலை தமிழகத்தில் இந்தத் தலைமுறையில் இல்லையென நம்பியிருக்கும் நிலையில், இதுபோன்ற பின்னோக்கிய நகர்வுகள் பெரும் மனவருத்தத்தையும் அயர்ச்சியையும் கொடுக்கின்றன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//மக்கள் வாக்குகளின் பங்கு என்ன? நடுவர்களின் பங்கு என்ன? எப்படி முடிவு செய்கிறார்கள்? போன்ற தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. //
ReplyDeleteஆமாம் தல... நாங்கூட யோசிச்சிருக்கேன்...
//இனிய உளவாக.. //
ReplyDeleteநெறயா பேர் என்னஎன்னவோ போட்டு பாத்துருக்கேன்...
உங்கள்து சூப்பர்... :-) மனசுக்கு புடிச்சது.. ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன்..
@கடைக்குட்டி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி !
அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் யூகேந்திரன் நாயர் வாசுதேவன் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார் .
ReplyDeleteஅனானி, வருகைக்கு நன்றி !
ReplyDeleteநிகழ்ச்சியில் இடை நிலைகளில் சில பல அரசியல் இருந்தது போலிருக்கிறது..
ReplyDeleteஆனாலும் மன நிறைவைத் தரும் ஒரு நிகழ்ச்சி..
தாம் இன்புறுவது உலகு இன்புறக் காண..எனப் பதம் பிரித்தால் நன்றாக இருப்பதோடு,நிறையப் பேரை சென்றடையுமே..
நன்றி.
அறிவன், தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
ReplyDelete//தாம் இன்புறுவது உலகு இன்புறக் காண..எனப் பதம் பிரித்தால் நன்றாக இருப்பதோடு,நிறையப் பேரை சென்றடையுமே..//
ReplyDeleteஅறிவன், நீங்கள் சொல்வது மிகவும் சரி.
பதங்களைச் சேர்த்தெழுதினால் உச்சரிக்கும்போது வரும் அழகிற்காகத் தான் அப்படியே பயன்படுத்தினோம்.
நன்றி!