(பழைய மின்னஞ்சல் தமிழாக்கம். ஏற்கனவே பார்த்தவர்கள் பொறுத்தருள்க!)
தற்கொலை முடிவெடுத்து 11-வது மாடியிலிருந்து கீழே குதித்த மேரி தரையை நோக்கித் தன் இறுதிப்பயணத்தை ஆரம்பித்தாள்..... 10-வது மாடி...
அந்த புதுமணத் தம்பதியர் சண்டையில் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டிருந்தனர்.
9-வது மாடி...
உறுதியான மனம் படைத்த பீட்டர் அழுதுகொண்டிருந்தான்.
7-வது மாடி...
டேன் தன் வழமைபோல் மன அழுத்தத்துக்கான மருந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
6-வது மாடி...
இன்னும் வேலைகிடைக்காத ஹெங் தான் வாங்கிவந்த செய்தித்தாள்களில் வேலைவாய்ப்பு விளம்பரங்களைத் தேடிக்கொண்டிருந்தான்.
4-வது மாடி...
ரோசி தன் ஆண் நண்பருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கத்திக் கொண்டிருந்தாள்.
3-வது மாடி...
அந்த தாத்தா இன்றாவது யாரும் தன்னைச் சந்திக்க வருவார்களா என்று சன்னலில் பார்த்துக்கொண்டிருந்தார்.
2-வது மாடி.....
லில்லி ஆறுமாத்திற்குமுன் விபத்தில் இறந்த தன் கணவனின் புகைப்படைத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
முதல்மாடி...
'நான் தான் இந்த உலகிலேயே துரதிர்ஷ்டசாலி என நினைத்திருந்தேன்'
'ஆனா, எல்லோருக்குமே அவரவர் பிரச்சனைகளும், கவலைகளும் இருக்கத்தானே செய்கிறது'
'இவர்களை விட நான் ஒன்றும் அவ்வளவு துயரத்தில் இல்லையே'
'இப்போது அவர்கள் எல்லாரும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்'
'ம்... எப்படியோ! என்னைப்பார்த்த பிறகு, அவர்கள் துயரம் ஒன்றும் அவ்வளவு பெரிதில்லை எனக் கண்டிப்பாக நினைத்துக்கொள்வார்கள் !'
No comments:
Post a Comment
இனிய உளவாக......