Saturday, April 11, 2009

மனிதவாழ்க்கை - குட்டிக்கதை

மின்னஞ்சலில் வந்த கதையின் தமிழாக்கம்.

கடவுள் கழுதையைப் படைத்து, 'நீ கழுதை. காலைமுதல் மாலைவரை பொதிசுமைப்பாய். 50 வருடங்கள் உயிர் வாழ்வாய்' என்று அதனிடம் கூறினார். கழுதையோ தனக்கு 20 வருடங்கள் போதுமென வரம் வாங்கிக்கொண்டது.

கடவுள் நாயைப்படைத்து அதனிடம் சொன்னார், 'நீ ஒரு நாய். மனிதர்களின் நல்ல நண்பனாய் இருந்து அவன் வீட்டைக் காப்பாய். அவன் கொடுப்பதை உண்டு 30 வருடம் வாழ்வாய்'. நாய் 15 வருடம் போதுமென வரம் பெற்றுக்கொண்டது.

பின், குரங்கைப் படைத்த கடவுள் அதனிடம், 'நீ குரங்கு. மரக்கிளைகளுக்கிடையில் தாவி வித்தைகள் செய்து வேடிக்கை காட்டி, 20 வருடங்கள் வாழ்வாய்' என்றார். குரங்கும் தனக்கு 10 வருடங்கள் போதுமென வரம் பெற்றது.

கடைசியாக, கடவுள் மனிதனைப் படைத்து, 'நீ மனிதன். இந்த பூமியில் பகுத்தறிவுள்ள ஒரே உயிரினம் நீ தான். உன் அறிவைப் பயன்படுத்தி அனைத்து உயிர்களையும் கட்டுப்படுத்தி, உலகை ஆள்வாய். 20 வருடங்கள் உன் வாழ்க்கை' என்று அவனிடம் சொன்னார். அதற்கு மனிதன், 'ஐயா, 20 வருடங்கள் மிகக்குறுகிய காலம். கழுதை, நாய், மற்றும் குரங்கு வாழவிரும்பாமல் குறைத்துக் கொண்ட (30+15+10) வருடங்களையும் என் வாழ்நாளில் சேர்த்து வழங்குங்கள்' என மன்றாட, கடவுளும் இசைந்து வரம் அளித்தார்.

இதன்படி, மனிதன் முதல் 20 வருடங்கள் மனிதனாக வாழ்கிறான். பின், மணம் முடித்து 30 வருடங்கள் கழுதையாக குடும்பத்துக்கு உழைக்கிறான். குழந்தைகள் வளர்ந்த பின், நாய் போல் கொடுத்தை சாப்பிட்டுக்கொண்டு 15 வருடங்கள் வீட்டை கவனித்துக்கொள்கிறான். வயதான பின், குரங்கைப்போல் ஒரு பிள்ளையின் வீட்டிலிருந்து மற்ற பிள்ளையின் வீட்டுக்கு மாறி மாறிப் போய் பேரக்குழந்தைகளுக்கு வேடிக்கை காண்பிப்பதாய் மனிதனின் வாழ்க்கை அமைகிறதாம்.

இது எப்படி இருக்கு?

7 comments:

  1. யதார்த்தத்தின் மெய்யான கோர்வை.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. நல்ல கருத்துள்ள கதை.

    ReplyDelete
  4. @பாலா
    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  5. அஹா நான் இதை கணனியில் கார்ட்டூன் வடிவில் பார்த்தேன். நீங்கள் அதை கதையாக்கியிருக்கிற விதம் அழகாயிருக்கு!

    ReplyDelete
  6. @யாழினி
    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  7. ya, its really original moral.

    ReplyDelete

இனிய உளவாக......

Pages

Flickr