‘சார், குடிக்க மினரல் வாட்டரா, இல்ல ஓட்டல் தண்ணியா?’
இன்றைய தினங்களில், இந்தியாவில் சாதாரணமாக எந்த உணவகத்தில் சென்று அமர்ந்தாலும் பணியாளரிடம் நாம் எதிர்கொள்ளும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். இந்த ஒரு கேள்வி நமக்குள், அவர்களை நோக்கி, எழுப்பும் கேள்விகள் நிறைய. முதலில், உங்கள் உணவகத் தண்ணீர், மினரல் வாட்டருக்கு இணையான தரமும், சுகாதாரமும் அற்றது என ஒப்புக்கொள்கிறீர்களா?
சுகாதாரமற்றது என்றால்:
சுகாதாரமற்ற தண்ணீரை உங்களை நம்பி வரும் வாடிக்கையாளருக்குக் கொடுப்பதற்கு உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? எங்கள் உணவகத் தண்ணீர் சுகாதாரமற்றது என வெளிப்படையாகத் தெரிவிக்கும் தைரியம், நேர்மையாவது இருக்கிறதா? உங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கொடுப்பது உங்கள் கடமையென்று நீங்கள் நினைக்கவில்லையா? சுத்தமான தண்ணீரைக்கூட உங்களால் வாடிக்கையாளர்களுத்துத் தரமுடிவில்லை என்றால் எப்படிச் சுகாதாரமான உணவை அவர்களுக்குத் தருவீர்கள் என எதிர்பார்ப்பது? இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெயர்ப்பலகையில் உயர்தர உணவகம் என்று போட்டுக்கொள்வது சரியா?
உணவகத் தண்ணீர் சுகாதாரமானது தான் என்றால்:
வரும் வாடிக்கையாளர்களிடம் மினரல் வாட்டர் விற்கவேண்டிய அவசியம் என்ன? வாடிக்கையாளர் மினரல் வாட்டர் வாங்கும்போது, உங்கள் உணவகத் தண்ணீர் சுகாதாரமற்றது என்ற அவர் எண்ணத்தை மறைமுகமாக(உண்மையில், வெளிப்படையாக)த் தெரிவிக்கிறாரே, உங்களுக்கு வெட்கமாக இருக்காதா? அப்பட்டமாக மினரல் வாட்டர் விற்பனையை 'ஊடுதொழிலா'கச் செய்யும் நோக்கம்தானே இது? உணவகத் தண்ணீர் சுத்தமாக இருக்காது என்ற மக்களின் பொதுவான எண்ணத்தை மாற்றவேண்டிய கடமையை விடுத்து, அவ்வெண்ணத்தையே விற்பனைக்கு பயன்படுத்துவது கேவலமாகத் தோன்றவில்லையா?வாடிக்கையாளர் மினரல் வாட்டர் வாங்கும் பட்சத்தில், மினரல் வாட்டர் விற்பனையிலும் லாபம், உணவகத் தண்ணீர் மீதப்படுவதால் அதுவும் லாபம் என இரட்டை லாபம் பார்க்கிறீர்கள் தானே?
உண்மையில், இது லாபமா? கொள்ளையா?
Nice Post...
ReplyDeleteMe too have the same template.
சரியான கோணத்தில் நல்லதொரு அலசல்
ReplyDeleteநல்ல நியாயமான கேள்விகள். ஆனால் எத்தனைப்பேருக்கு இது சென்றடையும் என்று தெரியவில்லை.
ReplyDeleteவியாபாரம் கடைக்கு, சுகாதாரம் நமக்கு
ReplyDeleteமினரல் வாட்டர் ஒரு அய்ட்டம் கூல் ட்ரின்ஸ் மாதிரி.சுடு தண்ணி கேட்கலாம்.தருவார்கள்
நுணூக்கம் பார்த்தால் நுழைய கூடாது
A good point!. Obviously, it is more profitable to the hotel, esp in places like chennai, where they have to buy water everyday
ReplyDeleteThe government, whose responsibility is to provide clean water to drink, itself is shameless. Not that they encourage people to buy mineral water, but most of the people now drink mineral water as against tap water (sorry if I am generalizing this)
ReplyDeleteThat being the case, how can we expect the vendors to have conscience?
--anvarsha
இப்டி நீங்க நேராவே ஹோட்டல்காரனை கேள்வி கேட்டுயிருக்கனும்! அப்பதான் திருந்துவாங்க பாஸ்...
ReplyDelete@குரு, ஈரோடு கதிர், மோகன், அழகன், கலையரசன், அனானிகள்
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
மீண்டும் வருக!