Sunday, November 27, 2011

மயக்கம் என்ன - குடிமயக்கம்

ஒரு விதமான மனநிலை பாதிப்புக்கு உள்ளான நாயகன் மனைவியின் தொடர்ந்த அனுசரணையான துணையால் புகழின் சிகரததைத் தொடுகிற  கதை. கணிதவியலாளர் ஜான் நாஷின் வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஹாலிவுட் படம் A Beautiful Mind.  அடிப்படையில் அதே கதை (மட்டுமே). அதில் “தனது” இன்றைய தமிழ் கலாச்சாரம் பற்றிய அவதானத்தை கலந்து செல்வராகவன் கொடுத்திருக்கும் படம்தான் மயக்கம் என்ன. ஏற்கனவே ABM பார்த்திருந்ததால் இப்படம் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 

காட்சிக்கு காட்சி மது கோப்பைகளும் பாட்டில்களும் திரையை நிரப்பிக்கொண்டே இருப்பதால் இரண்டு மணிநேரம் ஏதோ ஓர் ஒயின் ஷாப் 'பாரு'க்குள் உட்கார்ந்திருந்துவிட்டு வந்த உணர்வு இறுதியில்

மயக்கம் என்ன - குடிமயக்கம்

Wednesday, June 23, 2010

ஹைக்கூ - 2



நீரோடை
காத்திருக்கிறது கொக்கு 
துள்ளும் மீன்கள்

---x---x---x---x---x---x---x---

ஓய்ந்தது மழை
மிதமான காற்று
மரத்தடியில் தூறல்

---x---x---x---x---x---x---x---

சிறுவனின் மகிழ்ச்சி
மழைநின்ற பின்னேரம்
கப்பல் காகிதத்தில்

Sunday, June 13, 2010

ஹைக்கூ - 1

தத்தளிக்கிறது எறும்பு
மரம் உதிர்த்துவிட
ஓடையில் சருகு
---0---0---0---0---0---0---0---

வெளியே மழை
என்வீட்டுத் தாழ்வாரத்தில்
சிட்டுக்குருவி
---0---0---0---0---0---0---0---

வீழ்த்தப்பட்ட மரம்
பறவையின் விசும்பல்
பியானோவிலிருந்து



Tuesday, December 8, 2009

சார், குடிக்க மினரல் வாட்டரா, இல்ல ஓட்டல் தண்ணியா?



‘சார், குடிக்க மினரல் வாட்டரா, இல்ல ஓட்டல் தண்ணியா?’
இன்றைய தினங்களில், இந்தியாவில் சாதாரணமாக எந்த உணவகத்தில் சென்று அமர்ந்தாலும் பணியாளரிடம் நாம் எதிர்கொள்ளும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். இந்த ஒரு கேள்வி நமக்குள், அவர்களை நோக்கி, எழுப்பும் கேள்விகள் நிறைய. முதலில், உங்கள் உணவகத் தண்ணீர், மினரல் வாட்டருக்கு இணையான தரமும், சுகாதாரமும் அற்றது என ஒப்புக்கொள்கிறீர்களா?

சுகாதாரமற்றது என்றால்:

சுகாதாரமற்ற தண்ணீரை உங்களை நம்பி வரும் வாடிக்கையாளருக்குக் கொடுப்பதற்கு உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? எங்கள் உணவகத் தண்ணீர் சுகாதாரமற்றது என வெளிப்படையாகத் தெரிவிக்கும் தைரியம், நேர்மையாவது இருக்கிறதா? உங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கொடுப்பது உங்கள் கடமையென்று நீங்கள் நினைக்கவில்லையா? சுத்தமான தண்ணீரைக்கூட உங்களால் வாடிக்கையாளர்களுத்துத் தரமுடிவில்லை என்றால் எப்படிச் சுகாதாரமான உணவை அவர்களுக்குத் தருவீர்கள் என எதிர்பார்ப்பது? இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெயர்ப்பலகையில் உயர்தர உணவகம் என்று போட்டுக்கொள்வது சரியா?

உணவகத் தண்ணீர் சுகாதாரமானது தான் என்றால்:

வரும் வாடிக்கையாளர்களிடம் மினரல் வாட்டர் விற்கவேண்டிய அவசியம் என்ன? வாடிக்கையாளர் மினரல் வாட்டர் வாங்கும்போது, உங்கள் உணவகத் தண்ணீர் சுகாதாரமற்றது என்ற அவர் எண்ணத்தை மறைமுகமாக(உண்மையில், வெளிப்படையாக)த் தெரிவிக்கிறாரே, உங்களுக்கு வெட்கமாக இருக்காதா? அப்பட்டமாக மினரல் வாட்டர் விற்பனையை 'ஊடுதொழிலா'கச் செய்யும் நோக்கம்தானே இது? உணவகத் தண்ணீர் சுத்தமாக இருக்காது என்ற மக்களின் பொதுவான எண்ணத்தை மாற்றவேண்டிய கடமையை விடுத்து, அவ்வெண்ணத்தையே விற்பனைக்கு பயன்படுத்துவது கேவலமாகத் தோன்றவில்லையா?வாடிக்கையாளர் மினரல் வாட்டர் வாங்கும் பட்சத்தில், மினரல் வாட்டர் விற்பனையிலும் லாபம், உணவகத் தண்ணீர் மீதப்படுவதால் அதுவும் லாபம் என இரட்டை லாபம் பார்க்கிறீர்கள் தானே?

உண்மையில், இது லாபமா? கொள்ளையா?

Saturday, December 5, 2009

Monday, July 27, 2009

சிந்தனை செய் மனமே! - 3


சிதைந்த அடையாளம்
உழவு எருதுகள்
கசாப்பு கடையில்

==@
==@==@==@==@==@==

வீட்டிற்குள்ளும் அமைதியில்லை
சமாதானப் புறாக்களுக்குள்
கடும் சண்டை

Pages

Flickr